அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 6 அன்று காலை 10 மணிக்கு மதவாத அரசியலை நிறுத்து என்ற முழக்கத்துடன் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் S.அகமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெற்று கண்டன உரையை நிகழ்த்த இருக்கிறார்கள்.