78
தஞ்சை மாவட்ட ஆட்சியராக ம. கோவிந்தராவ் ஐஏஎஸ் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட உத்தரவில், 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.