அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள மற்றும் பொதுமக்களுடன் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு.
மனிதநேய ஜனநாய கட்சியின் சார்பாக டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதனையொட்டி பல்வேறு ஆலோசனைகளையும்,கருத்துக்களையும் பெறவும் வழங்கவும் நாகை சட்டமன்ற உறுப்பினரும்,மனிதநேய ஜனநாய கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இன்று மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வருகை தந்தார்.
பொதுமக்களுடனும் கலந்துரையாடல் செய்தார்.மேலும் அவருடைய சட்டமன்ற பணிகளை சுட்டிக்காட்டி பலர் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.இந்த சந்திப்பில் மஜகவின் மாவட்ட மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் பங்கெடுத்தனர்.