Home » 24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் – தமிழக அரசு அதிரடி!

24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் – தமிழக அரசு அதிரடி!

0 comment

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பணியிடமாற்றம் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை, மதுரை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை ஆட்சியராக ஜெயரானி IAS,

திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் IAS,

விழுப்புரம் ஆட்சியராக மோகன் IAS,

புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு IAS,

தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS,

நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ் IAS,

கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் IAS,

விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி IAS,

தேனி ஆட்சியராக முரளிதரன் IAS,

செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத் IAS,

தேனி ஆட்சியராக முரளிதரன் IAS,

விழுப்புரம் ஆட்சியராக மோகன் IAS,

வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன் IAS,

திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ் IAS,

திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா IAS,

நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங் IAS,

திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் IAS,

கோவை ஆட்சியராக சமீரன் IAS,

திருப்பூர் ஆட்சியராக வினீத் IAS,

அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி IAS,

கரூர் ஆட்சியராக பிரபு சங்கர் IAS,

தென்காசி ஆட்சியராக சந்திரலேகா IAS,

ஈரோடு ஆட்சியராக கிருஷ்ன உன்னி IAS,

திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் IAS ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter