தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் இன்று(02/12/2017) மாலை 6:30மணிக்குமேல் அதிரை நகர அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, அதிரை நகர தமுமுக மமக தலைவர் சாகுல் ஹமீது(சாவண்ணா) அவர்கள் தலைமை தாங்கினார்.
தமுமுக மமக மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் டிசம்பர்6 குறித்து முக்கிய தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர தமுமுக மமக நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.