தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்று பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் :1/2015) எங்களது அமைப்பை ஐவாஹிருல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்ட ரீதியான எந்த ஆதாரம் மற்றும் முகாந்திரமும் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் எங்களது உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டுகள் வருகிறது.
ஜவாஹிருல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த காரணத்தை கொண்டும் எங்களின் தமுமுக என்ற பெயரை பயன்படுத்த கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐபிஎஸ், இது குறித்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.