தஞ்சை மாவட்டம், ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று(ஜூன்.14) நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.இம்முகாமில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்.இதில் மருத்துவர் சுஜிதா,மருந்தாளுனர்
அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் சிறப்பான ஏற்பாடுகளை மருந்தாளுனர் அப்துர் ரஹ்மான் செய்து கொடுத்து தடுப்பூசிகள் போடுவதற்கு பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.