113
முகநூலில் முகம்மது நபி குறித்து கேவலமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட சந்தோஷ் தனபால் என்ற சமூக விரோதியை கைது செய்ய வலியுறுத்தி அதிரை காவல்நிலையத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட முகநூல் ஐடியின் பெயரில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினர் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தின் பொது அமைதியை கெடுத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் தீவிரவாதிகளின் எண்ண நிறைவேறாது என்று இஸ்லாமியர்கள் சூளுரைத்துள்ளனர். மேலும் சமூக விரோதி சந்தோஷ் தனபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.