ஊரே அடங்கிரு! உயிரெல்லாம் அடங்குது!
இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்க போகுது இதே கடினமான நாட்கள்! இதே புலம்பல் தான் அடிகோட்டு ஏழை முதல் அயல்நாட்டு பணக்காரர்கள் வரை!
இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதன் வெளிப்பாடு என்பது தூண்டப்படுவதில் தான் இருக்கிறது. அதாவது இண்டியுசிங் இம்முனு ரெஸ்பான்ஸ்
என்று கூறுவார்கள். புரியும்படி சொல்லபோனால் நம் வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் எப்படி நாம் யார் என்று கேட்போமா அது போல பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் உடலுக்குள் வரும்பொழுது நம் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு, அவை விரட்டி அடிக்கப்படுகிறது. பொதுவாக வைரஸ் போன்ற கிருமிகள் வாழ்வதற்கு ஓர் உயிருள்ள செல்கள் தேவைப்படும்(Living host). அவை தனது மரபணுவை உயிருள்ள செல்களில் பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து ஒருவரை நோய் தொற்றுக்கு ஆளாக்குகிறது. அதாவது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குகிறது…
பலவீனம்! இதை பற்றி சற்று கவனித்து பார்த்தால் இது நுண் கிருமிகளில் இருந்து ஆரம்பமாவதை விட நம்மிலிருந்தே துவங்குகிறது… ஆம்! இதற்கான காரணங்களை பார்த்தால் நாம் அன்றாட வாழ்க்கை முறைகளில் மாற்றம், அதிகமான வேலை பளு, கவலைகள், வறுமை, உணவு வழக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் தீர்வு என்பது வேறெங்கோ கிடையாது. முதலில் நம்மில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அவற்றை பெறுவதற்கு நாம் நமக்கென்று ஓர் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிய பயணத்தில் நம் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
இக்கால இளைஞர்கள் அமைதிக்காக மது, புகை போன்ற போதை பொருட்களை நாடி செல்கின்றனர். நிச்சயம் அது சிறந்த தீர்வாகாது. இன்பமும் துன்பமும் வாழ்வின் அங்கம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. நிச்சயமாக வாழ்வின் இலக்கை நிர்ணயிப்பதன் மூலம் இது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தவிர்க்க முடியும். நல்ல உடல்பயிற்சி, விளையாட்டுக்கள் மற்றும் இறைவனை தொழுதல் போன்ற செயல்களினால் நம் உள்ளம் அமைதி பெரும்.
மேலும் பொறுமையை வாழ்வில் கடைபிடிப்பது சிறந்ததாகும். ஏனெனில் இறை நம்பிக்கையின் ஓர் அங்கமாக பொறுமை உள்ளது. இது போன்ற செயல்களினால் சிறந்த வாழ்வை நோக்கிய அடியை நம்மால் எடுத்து வைக்க முடியும் என்ற தளர்வுகளற்ற தன்னம்பிக்கையோடு……!
- தீ. அப்துல் ரஹ்மான் (M.sc.Biotech), அதிரை
