தஞ்சாவூர் மாவட்டம், தாமரங்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு பாலச்சந்தர் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். தடுப்பூசி முகாமை அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்த நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் முயற்சி மேற்கொள்ளும் என்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பஹாத் முகமது மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் மாவட்ட பொருளாளர் சுதாகர் மாவட்ட துணை தலைவர் குமரேசன் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஜம் ஜம் அசரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.