Home » கோவிஷீல்டு தட்டுப்பாடு ! அயல்நாடு செல்வோர் விரைந்து ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல் !

கோவிஷீல்டு தட்டுப்பாடு ! அயல்நாடு செல்வோர் விரைந்து ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல் !

by
0 comment

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோவாக்சின் தவிர்த்து இதர ஊசிகளுக்கு அயல் நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் லண்டன் இறக்குமதியான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

நமதூர் மக்கள் அதிகமாக வெளிநாட்டு சம்பாத்தியத்தை நம்பி இருப்பவர்கள் என்றும்,எங்கள் ஊருக்கு பிரத்தியேக முகாம் அமைத்து தர கோரி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிராம்பட்டினம் துணை கிளை சேர்மன் மரைக்கா கே இதிரீஸ் அஹமது மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில் தொடர்பு கொண்ட மருத்துவ துறையினர், தற்போது கோவிஷீல்டு தட்டுப்பாட்டில் உள்ளது எனவும், கோவாக்சின் தேவைப்பட்டால் முகாம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

அதற்கு கோவிஷீல்டு இருப்பு இருக்கும் வரை முகாம் அமைத்து தர கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மரைக்கா கே இதிரீஸ், தற்போது நடைபெற்று கொண்டு உள்ள முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறதா என பயனாளிகள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்து விட கூடாது என்றும் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற கேட்டு கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter