Home » மின் வெட்டிற்கு நாங்கள் காரணமல்ல- மறுக்கிறார் அணிலார்.

மின் வெட்டிற்கு நாங்கள் காரணமல்ல- மறுக்கிறார் அணிலார்.

by
0 comment

தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு, அணில்களும் காரணமாக உள்ளன என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார்.

தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர், பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது.

மேலும், அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக அணில்கள் தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள
தமிழ்நாடு அணில்கள் சங்க தலைவர் அணிலாரை சந்தித்தோம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு காரணமாக மிகுந்த அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளாகி, ஒரு நீண்ட மதில் சுவரின் பொந்துக்குள் பதுக்கி இருந்த அணிலார் மிகுந்த தயக்கத்துடன் கூறியதாவது.

தமிழ் நாட்டில் ஏற்படும் மின்வெட்டுக்கு எந்த வகையிலும் நாங்கள் காரணம் இல்லை என்றும், மின்சாரத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டில் சிறிதளவும் உண்மை இல்லை தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு காரணமாக எங்களது அணில்கள் இனத்துக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், எங்கள் அணில் இனத்தை ஈவு இரக்கமின்றி வேட்டையாடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறோம் என கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter