Home » நடுத்தெரு ஊ.ஒ நடுநிலை பள்ளியில் மாணவ,மாணவியர் சேர்க்கை தொடக்கம் ! பிள்ளைச் செல்வங்களை சேர்க்க பெற்றோர் ஆசிரியர் கழகம் அழைப்பு !

நடுத்தெரு ஊ.ஒ நடுநிலை பள்ளியில் மாணவ,மாணவியர் சேர்க்கை தொடக்கம் ! பிள்ளைச் செல்வங்களை சேர்க்க பெற்றோர் ஆசிரியர் கழகம் அழைப்பு !

0 comment

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம், நோட்,சீருடைகள், மசாலா முட்டையுடன் மதிய உணவு, யோகா பயிற்சி, விளையாட்டு பயிற்சி, காலணிகள்,வண்ண பென்சில்கள்,நிலநூல் வரைபடம்,கணித வடிவியல் பெட்டி, போட்டித்தேர்வுக்கு தயார் செய்தல் இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்.

மாதகட்டணம் டெர்ம் கட்டணம் எதுவுமில்லை !

இக்கல்வி கூடத்தில் பயின்ற பலர் இன்றளவும், மருத்துவர்களாகவும், இஞ்சினியர்களாகவும் இன்னப்பிற துறைகளில் உயர் பதவியில் இருந்து வருகிறார்கள்.

காற்றோட்டமான இயற்கை எழில் கொஞ்சும் குளக்கரை அருகே இப்பள்ளி அமைதுள்ள்ளது கூடுதல் சிறப்பு, 80℅ பெண் ஆசிரியைகளை கொண்ட இப்பள்ளியில் மாணவிகளுக்கு பெரும்பாலும் பெண் ஆசிரியைகளை கொண்டே பாடம் நடத்தப்படுகிறது.

எனவே பொருளாதாரத்தை மிச்சப்படுத்தி நல்ல கல்வியை நமது பிள்ளை செல்வங்களுக்கு வழங்கிட அன்போடு அழைக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அதிராம்பட்டினம்.

மேலதிக தொடர்புக்கு :6369010428

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter