71
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதில் மீன் பிடித்து கொண்டிருந்த ஐவரும் கடலில் கவிழ்ந்தனர். இவர்களின் அலரல் சப்தம் கேட்டு அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவின் அவசர ஊர்தியில் மருத்துவ அணியினர் விரைந்தனர்.
பின்னர் அவர்களை மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.