Home » பட்டுக்கோட்டையில் பரபரப்பு : அவசர ஊர்தியை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் !

பட்டுக்கோட்டையில் பரபரப்பு : அவசர ஊர்தியை சாலையில் நிறுத்தி திடீர் போராட்டம் !

by
0 comment

தமிழகம் முழுவதும் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் அவசர ஊர்தி சேவையை வழங்கி வருகிறது.

அதன்படி பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு மசூதி அருகே வாகன நிறுத்துமிடத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை இருதரப்பும் நடத்திய பேச்சுவார்த்தை தோவ்லியில் முடிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த தமுமுக நிர்வாகிகள், நடுரோட்டில் ஆம்புலன்சை நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பட்டுக்கோட்டையில் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter