44
பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே உள்ள காடுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்களால் எச்சரிக்கப்பட்டும் கண்டுகொள்ளாத நபர்கள் நேற்று மாலை மரங்களுக்கு தீ வைத்தனர் தீ மளமளவென பரவ ஆரம்பித்ததை அடுத்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அடர்ந்த செடிகொடிகள் நிறைந்த இப்பகுதியில் காவல்த்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.