தஞ்சை தெற்கு மாவட்ட
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, மனிதநேய மக்கள் கட்சியின் மனிதஉரிமை நுகர்வோர் பாதுக்காப்பு அணி மாநில செயலாளர் தீன் முகமது, மீனவர் அணி மாநில செயலாளர் ஜெகதை செய்யது, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மதுக்கூர் புரோஸ்கான் நன்றி கூறினார்.







