கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் மார்க்க கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதனிடையே கடந்த ஜூன் 17ம் தேதி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு வளாக கட்டடத்தில் அதிரை எக்ஸ்பிரசின் மாபெரும் பரிசளிப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் உட்பட ஆறுதல் பரிசுகளையும் சேர்த்து 104 பேருக்கு இந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பரிசுகளை பெற தகுதியானவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே போட்டியின்போது பதிவு செய்த தொலைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
BIG BREAKING: அதிரை எக்ஸ்பிரசின் மாபெரும் பரிசளிப்பு மற்றும் விருதுகள் விழா! ஜூலை 16ல் கோலாகலம்!
89
previous post