அதிராம்பட்டினம் அவிசோ மன நல காப்பகத்தில் சில சம்பவங்கள் நடப்பதாக அவ்வப்போது வெளியாகும் தகவல் வெளி உலகுக்கு தெரியாமல் அமுங்கி போவது வழக்கம்.
இம்முறை நிர்வாகியின் மனைவியால், வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அடம் பிடித்த மன நோயாளி சிறுவன் ஒருவனை அடித்தே கொன்றதாக அவரது மாஜி மனைவி உள்துறை இலாகாவிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விரைந்த அதிகாரிகள் பட்டாளம், அவிசோவிற்குள் நுழைந்து தமது கடமையக் செய்தது, அதில் சிறுவன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது.
அதில் மண்டை ஓடு,எழும்புகூடுகள் என தென்பட அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விசாரனை வளையத்திற்குள் அவிசோ ஆட்களை கொண்டு வந்தனர்.
இந்த எழும்பு கூடுகள் எதனால் எப்படி இவ்வளாகத்திற்குள் கிடைத்தன?
மரணித்த சிறுவனை மயானத்தில் அடக்கம் செய்யாமல் காப்பகத்தில் அடக்கம் செய்ய காரணம் என்ன?
மரணித்தாக கூறப்படும் சிறுவனுக்கு மரணச்சான்று பெறப்படாதது ஏன்?
மரணம் குறித்து சம்பந்தப்பட்ட ஊர் ஜமாத்தார்களிடம் எதேனும் தெரிவிக்கப்பட்டதா?
என்ற கோணத்தில் விசாரனை முடுக்கிவிட, முழித்து கொண்டிருக்கிறார்கள்
சம்பந்தப்பட்ட காப்பக உரிமையாளர்கள்.
அரசு இவ்விகரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி உண்மை தன்மையை வெளி உலகுக்கு தெரிவிக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


