Home » தமுமுக இரு அணிகள் மோதல் !

தமுமுக இரு அணிகள் மோதல் !

0 comment

குர்பானி கொடுப்பதில் இயக்க பெயரை உரிமை கோரும் இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

தமுமுகவின் பொது செயலாளராக இருந்த ஹைதர் அலியை ஜவாஹிருலாஹ் தன்னிச்சையாக இயக்கத்தில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது.

நீக்கப்பட்ட ஹைதர் அலி தமுமுகவின் இயக்க பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது என இடைக்கால தடையும் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஹைதர் தரப்பு நீக்கியது செல்லாது என போர்கொடி தூக்க இயக்கத்திற்குள் இரண்டாம்.குடித்தனம் அரங்கேறியது.

இந்த நிலையில் ஹைதர் குரூப்பினர் மற்றும் ஜவாஹிருல்லாஹ் அணியினரும் குர்பானி கொடுப்பதற்காக தமிழகம் முழுவதும் கிளை நிர்வாகிகள் மூலம் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.

அதன்படி இரு அணிகளாக பிரிந்து வந்தவாசியில் ஒரே இயக்க பெயரை பயன் படுத்துவதால் பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.

இதனை தடுக்க இரண்டு அணியினரும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டு பிரச்சாரம் செய்யவே விபரீதம் ஆனது.

இந்த விவகாரம் காட்டு தீ போல பரவவே தலைமைக்கு தலை இடியாய் போனது இருதரப்பும் சென்னை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட திக்குமுக்காடிய அப்பகுதி காலவலர்கள் இரு தரப்பையும் அழைத்து பேசி தீர்வு காணப்படும் உறுதி அளித்த பின்னர் முற்றுகையை முடித்து கொண்டனர்.

தமுமுக பேரியக்கம் கடந்த 1995 ஆண்டு முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் இயக்கமாகும் இதில் சட்ட விதிகள் படி பொது குழுவின் முடிவின் பிரகாரமே தலைமை நிர்வாகம் அமைக்கப்படும் ஆனால் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தொடர்ந்து தலைமைத்துவத்தை தக்க வைத்து கொண்டு பிறருக்கு வாய்ப்பு அளிக்க வில்லை என்பது தான் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதனிடையே ஹைதர் அலி அணியினரும் (1/2015) ட்ரேட் மார்க் சட்டத்தின் கீழ் தமுமுகவின் பெயரை பதிவு செய்து தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்.

இரண்டு தரப்பும் நாங்கத்தான் தமுமுக என கூறிக் கொண்டு சமூகப்பணியை போட்டி போட்டு செய்வதால், மக்கள் மட்டுமல்ல குர்பானி மாடுகளும் குழப்பம் அடைந்து இருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter