Home » அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை செயலகத்தில் பரிசளிப்பு விழா! வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பரிசுகளை பெறலாம்!!

அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை செயலகத்தில் பரிசளிப்பு விழா! வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பரிசுகளை பெறலாம்!!

by
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளைய தினம் நடைபெறும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பதற்கான தடையை தமிழ்நாடு அரசு வரும் 19ம் தேதி வரை நீட்டிருப்பதால் அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக ஏற்கனவே அறிவித்த தேதியில் (ஜூலை 16, வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணி முதல் அதிரை புது பள்ளிவாசல் எதிர் கட்டடத்தின் முதலாவது தளத்தில் உள்ள அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை செயலகத்தில் தங்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வெற்றியாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். வெற்றியாளர்கள் குறித்த விபரம் போட்டியின்போது அவர்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண் மூலம் போட்டி ஒருங்கிணைப்பாளர் தகவல் தெரிவிப்பார். அவர்கள் மட்டும் நேரில் வந்து பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு +91 95510 70008 என்ற அதிரை எக்ஸ்பிரஸ் எண்ணை தொடர்புக்கொள்ளவும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter