அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்
தேதி:09/07/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. நெய்னா முகமது ( ஒருங்கிணைப்பாளர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : சகோ. A. சாதிக் அகமது ( இணைத்தலைவர் )
தீர்மானங்கள்:
1) இவரிடமும் பைத்துல்மாலின் மூலம் கூட்டுக்குர்பானி மற்றும் தனி நபர் குர்பானி திட்டத்திற்கு ஆதரவு தந்து அதன் இரட்டிப்பு நன்மையான இந்த கடமையை சுன்னத்தான ஒளுகியா கடமையை நிறைவேற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டுக்குர்பானி ஒரு பங்கு Rs.2200/- வீதம் தனிநபர் முழு ஆடு கிலோ Rs.370/-மேனி எடைக்கேற்ப அதன் பொறுமதியினை நியாயமான விலையில் பைத்துல்மால் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது, மேலும் பைத்துல்மாலின் மூலம் கொடுக்கப்படும் குர்பானியின் பங்கு இறைச்சியினை சரியான நேரத்தில் தகுந்த ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் என்பதால் இந்த குர்பானித்திடத்தில் ரியத்திலுள்ள சகோதரர்கள் இதற்கு ஆதரவும் தங்களின் பெயர்களை சகோ. அப்துல் மாலிக் அவர்களிடம் அளிக்குமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
2) ABM-ன் பென்ஷன் மறுஆய்வு திட்டத்தை செயல்படுத்தி முறையான ஆதரவற்ற ஏழைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஆறு மாதமும் ஆய்வு செய்து சரியான முறையில் செம்மைப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3) தற்சமய காலகட்டத்தில் அவசிய திட்டத்தில் ஒன்றான AAF-ன் ஆக்சிஜன் பிளான்ட் திட்டத்திற்கு முழு ஆதரவும் அளிக்குமாறும் முடிந்தளவு தனிப்பட்ட முறையிலோ அல்லது பைத்துல்மாலின் மூலமோ பொருளாதார உதவி அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கான தொலை நோக்கின் வரைத்திட்டங்களை வெளியிடுமாறு தலைமையகத்திடம் இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) இன்ஷா அல்லாஹ் வரும் ஈதுல் அத்ஹா பெருநாள் தொழுகை சந்திப்பினை அதிரைவாசிகள் அனைவர்களும் பத்ஹா WATER TANK ( GARDEN பள்ளியில் ) பெருநாள் தொழுகை தொழுதுவதென்றும் அதன் பின்னர் தொழுகை முடிந்தவுடன் அதிரைவாசிகளின் ஈத்மிலான் ஒன்று கூடல் சந்திப்பினை நடத்துவதெனவும் இதில் அதிரைவாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது.
5) பரக்கத் சார் ( ABM-ன் தலைவர் ) அவர்களின் மகனின் திருமண அழைப்பிதழ் 11.07.2021 (தொலைபேசியின்) மூலம் வந்த தகவலை இக்கூட்டத்தில் அறிவித்து அத்தம்பதியர்களின் மண வாழ்விற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
6) சமீபத்தில் இறையடி சேந்த ABM-ன் பொறுப்புதாரிகளின் உறவினர்கள் மற்றும் அதிரைக கவிஞர் தாஹா சார் அவர்களின் இரங்கலையும் மற்றும் ஆக்கிரத்தின் வாழ்விற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 90-வது அமர்வு AUGUST மாதம் 13-தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
