அதிரை கரையூர் தெருவில் நேற்று முன் தினம் ஏற்ப்பட்ட திரு.ரவி என்பவரது குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மீன்பிடி தொழில் செய்து வரும் ரவி மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி, அம்மா முத்துலெட்சுமி ஆகீயோரை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் அவர்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருடகள்,பாய், போர்வை,தார்பாய்,கைலி,புடவை, மெழுகு திரி,சோப்,போன்ற அத்தியவாசிய பொருட்களை வழங்கினர்..இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.A.ஜமால் முகமது,முன்னால் தலைவர் Rtn.வெங்கடேஸ், Rtn.சாகுல் ஹமீது,முன்னால் செயளாலர் Rtn.இசட்.அகமது மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.