வளைகுடா நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை இசுலாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சவுதி ரியாத் நஸ்ரியாவில் உள்ள கிங் ஃபஹத் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்வில் ரியாத் வாழ் அதிரையர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.