கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியில் 209 பேர் பங்கேற்றனர். இதில் ஆறுதல் பரிசுக்கு தகுதியான104 பேருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை செயலகத்தில் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நபர்கள் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அதிரையை சேர்ந்த ஜெ.அஸ்ரா பர்வீன் ( த/பெ ஜெஹபர் அலி ) முதலிடம் பிடித்து ஒரு கிராம் தங்க நாணயத்தை தட்டிச்சென்றுள்ளார். இதேபோல் கூத்தாநல்லூரை சேர்ந்த அ.ருக்சானா (த/பெ அப்துல் ரஷீது) இரண்டாம் இடம் பெற்று மிக்சியை பரிசாக வென்று இருக்கிறார். மேலும் இவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கிய பாராட்டு கடிதங்கள் தனித்தனியாக வழங்கப்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களுக்கான பரிசளிப்பு விரைவில் நடைபெறும்.


