44
மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடக உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது
இதனால் கர்நாடக அணைகள் நிரம்பி தமிழகத்தின் பிரதான நதிகளுக்கு ஆற்று நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், வானம் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் வட்டமடித்த கருமேகங்கள் பலத்த இடியுடன் கூடிய மழையை பொழிந்து வருகிறது.
கடைமடை பகுதிகளுக்கு ஆற்று நீர் வர காலதாமதம் ஆகும் நிலையில் இம்மழை ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் விவசாயிகள்.