Home » அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி..!

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி..!

by
0 comment

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2021-22 ம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ராயல் மஹாலில் நடைபெற்றது.

புதிய தலைவராக ஜமால் முகமது, செயலாளராக ரியாஸ் அகமது,பொருளாளராக அகமது தையூப் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.

ரோட்டரி சங்க தலைவர் A. ஜமால் முகமது அவர்கள் முன்னிலை வகித்தார்.முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். ரோட்டரியில் பத்து புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து மண்டலம் 12 ன் மாவட்ட துணை ஆளுனர் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினரும் மஹாராஜ ரெடிமேட் உரிமையாளருமான ஆஸிப் அலி சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர்,பள்ளி மாணவிகள் இருவருக்கு ஆன் லைன் படிப்புக்காக இரண்டு டேப், மற்றும் நோயாளி இருவருக்கு ஒரு வருடத்திற்க்கு தேவையான மருந்து செலவுகளை ரோட்டரி சங்கம் ஏற்றது.

கொரொனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள்,ரத்த கொடையாளர்கள்,ஆம்புலண்ஸ் ஓட்டுனர்கள்,பசித்தோருக்கு உணவளித்த சமூக ஆர்வலர்கள்,பத்திரிக்கையாளர்கள்,இனையதள ஊடகங்கள் ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முத்துபேட்டை ரோட்டரி சங்க முன்னால் தலைவர் மெட்ரோ மாலிக்,மன்னார்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள்,மதுக்கூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க உறுப்பினரகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.முடிவில் வருகை தந்த அனைவரையும் 2022-23 ஆண்டிற்க்கான தலைவர் தேர்வு இசட்.அகமது மன்சூர் அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter