
நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் தொடங்கப்பட்டு 16ஆண்டுகள் கடந்த போதும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொண்டாற்றி வருவதே எமது முதலான முழக்கமாகும் !
அவ்வாறே அயலக உறவுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து வருகிறோம்.
நமதால் ஆன சிறு பங்களிப்பாக நேரம் ஒதுக்கும் எமது பங்களிப்பாளர்கள் முழு கவனத்துடன் செய்திகளை சேகரித்து பதிந்து பரப்பியும் வருகிறார்கள்.
அதிரை எக்ஸ்பிரஸ் குடும்பத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் வாசக பெருமக்கள், விளம்பரதாரர்கள் மட்டுமின்றி இத்தளம் தொடர்ந்து தொய்வின்றி தொடர ஒத்துழைப்பு நல்கும் அனைவரையும் வாழ்த்துவதோடு இன்று பெறப்பட்ட கேடயம்,சான்று ஆகியவைகளை ஒட்டுமொத்த வாசக நெஞ்சங்களில் கரங்களுக்கு சமர்பிக்கிறோம்.
கைதட்டல்களுக்கும், சர்டிஃபிக்கட்டுகளுக்கும் அழையும் இக்காலத்தில் கூட தேடி வரும் அங்கீகாரத்தை அலட்டி கொள்ளாமல் வாங்கும் பக்குவம் எங்களின் மூத்த பத்திரிக்கைகளின் பக்குவம் என்பதை பலரும் பாராட்டி மகிழ்வதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து

வெல்டன் அதிரை எக்ஸ்பிரஸ்…
வான் நோக்கி புறப்படு…. வாழ்த்துக்கள் எனும் படிகட்டுகளால்……