அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக தாய்பால் வார விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.A.ஜமால் முகமது தலைமையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் நன்மைகள் குறித்து அதிரை அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் திரு.S.கார்த்திகேயன்MBBS.DLO மற்றும் முன்னால் அரசு மருத்துவர் டாக்டர்.SM.ஹாஜா முகைதீன் ஆகியோர் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் தாய்மார்கள்களுக்கு சத்தான பழங்கள் ஊட்டசத்து பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேபி செட் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவர்கள் திருமதி.கலைவாணிMBBS.DLO,
திருமதி வனசுந்தரிMBBS,DO, முத்துப்பேட்டை ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.மெட்ரோ மாலிக் அதிராம்பட்டினம்ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது, Rtn.T.முகமது நவாஸ் கான், முன்னால் செயலாளர் Rtn.இசட்.அகமது மன்சூர், உறுப்பினர்கள் Rtn.M.மன்சூர்(USA), Rtn.லக்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் நடத்திய தாய்பால் வார விழா.!
44