அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நூற்றாண்டை கடந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போர்டு ஹை ஸ்கூல் என்று ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இதில் ஜெமினி பிக்சர் நிறுவனர் S. S வாசன் .முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுக பொது செயலாளர் சசிகலா போன்ற பிரபலங்களும். எண்ணற்ற மருத்துவர்கள். நீதிபதிகள். காவல் துறை அதிகாரிகள் என பல பேரை உருவாக்கிய இந்த பள்ளியின் 90 T0 9 7 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் தங்களது மலரும் நிைனைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர் சந்தான கிருஷ்ணன் கூறியது 36 ஆண்டுகள் இந்த பள்ளியில் பணியாற்றினேன் இங்கு படித்த மாணவர்கள் என் பிள்ளைகளாக தான் இருந்தார்கள். அவர்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
மற்றொரு ஆசிரியர் பன்னீர் செல்வம் கூறிய போது நான் சர்ச்க்கு போகும் போது கடவுளை வணங்குவேன் அதற்கு பிறகு இந்த பள்ளி கூடத்தை படியை மிதிக்கும் பேn து கடவுளை வணங்குவேன் இது கோவில் இந்த கோவிலை மேம்படுத்த அனைத்து மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.
ஆசிரியர் நெப்பொலியன் கூறியது நாங்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எங்களுக்கு பேச ஆள் கிடைத்தால் பேசி கொண்டே இருப்போம் நாங்கள் பாடம் நடத்திய காலத்தில் முரட்டு தனமாக நடந்து கொண்ட நீங்கள் இப்பொழுது எங்களை பேச வைத்து ரசிக்கின்றீர்களே பாசத்தை கூட முரட்டு தனமாகத்தான் காட்டுவீர்களா என நெகிழ்ந்தார்.
இந்த நிகழ்வில் ஆசிரியர் கள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் மாணவர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி காலில் விழந்து ஆசிர்வாதம் பெற்றனர் தங்கள் படித்த பள்ளிக்கு கணினி வழங்கினர்.