ஐக்கிய அரபு அமீரகம் 46 ஆவது தேசியதின விடுமுறை நாட்களில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் (Get together) நிகழ்வு டிசம்பர்-2, 2017 (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பினருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. (போட்டிகள் மற்றும் பரிசு வென்றோர் விபரம் தனிசெய்தியில் காண்க)
மதியம் தமிழக சுவையுடன் தரமான உணவும், மாலை தேநீரும் வழங்கப்பட்டன. உள்நாடு மற்றும் பிற நாடுகளிலிருந்தும் ஊர் பிரமுகர்கள் கலந்து அமெரிக்கா. ஆஸ்திரேலியா, பஹ்ரைன் மற்றும் இந்தியாவிலிருந்தும் சிறப்பு பரிசுகள் ஸ்பான்சர் செய்யப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டோருக்குப் போட்டிகள் மூலமும் குலுக்கல் மூலமும் வழங்கப்பட்டன. (பரிசுகள் வழங்கியோர் மற்றும் வென்றோர் விபரம் தனி செய்தியில் காண்க).
அமீரகம் வாழ் மூத்த மஹல்லாவாசிகள் மற்றும் அமீரக, இந்திய தொழிலதிபர்கள், தொழில் முனைவோரும் மஹல்லாவாசிகளை வைத்து போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை குலுக்கிப்போட்டு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை, கால் பவுன் தங்கக் காசுகள் எட்டுபேருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கபட்டன.
நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நூறுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகள் குர்ஆன் கிராஅத்துடன் தொடங்கி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றன.