தேதி:13/08/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 90-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. நிஜாமுதீன் ( ஆலோசகர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. நெய்னா முகமது ( ஒருங்கிணைப்பாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
நன்றியுரை : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) இம்மாதம் 90-வது மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, அதில் நமதூர் வாசிகள் அதிக அளவில் கலந்து சிறப்பித்தார்கள். ரியாத் கிளைக்கு கடந்த 8 வருடமாக ஆதரவும் பொருளாதார உதவியும் முழு ஒத்துழைப்பும் அளித்து, நமதூர் ஏழை எளிய மக்களின் சேவையை மேம்படுத்துவதும் வண்ணம் தொடர்ந்து ஆக்கப் பூர்வமாக செயல்படுவது விசயமாக இக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு விடுபட்ட ரியாத் சகோதரர்களை இணைத்து மாதச் சந்தாவினை மேலும் அதிகப்படுத்தும் விதமாக உதவி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
ரியாத் கிளை மேலும் சிறப்பாக செயல்படும் வண்ணம் விடுபட்ட அதிரை சகோதரர்களை இதே வாட்சப் குரூப்பில் இணைத்து மேலும் ஆதரவும் பொருளாதார உதவியை நாடுவது விஷயமாக ஆலோசிக்கப்பட்டு தானாக முன் வந்து இவ்வரும் காலங்களில் நடைபெறக்கூடிய மாதாந்திர கூட்டத்தில் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ரியாத் கிளையிலிருந்து ஊர் சென்ற சகோதரர்கள் அனைவர்க்கும் தலைமையகத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி முழு ஆதரவும் ஒத்துழைப்பும் ABM தலைமையகத்தில் நடைபெற்று வரும் மாதாந்திர கூட்டங்களில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
2) இவ்வருடம் குர்பானி திட்டத்தினை வெற்றிகரமாக திறம்பட சிறந்த லாபம் நோக்கில் 446 மாடுகள் 96 ஆடுகள் இவைகளை அறுத்து சரியான நேரத்தில் சரியான ஏழைகளுக்கு விநியோகம் செய்த ABM TEAM (குழுக்கள்) செயல்பட்ட அனைத்து பொறுப்புதாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் இனிவரும் காலங்களில் எவ்வித குறைபாடின்றி இதைவிட செம்மையாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
3) இவ்வரிடம் ரியாத் கிளை சார்பாக குர்பானித்திட்டத்திற்கு பங்களித்த அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ABM-ன் மூலம் இக்கடமையினை நிறைவேற்றி ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
4) ரியாத் கிளையின் வேண்டுகோளுக்கினங்க நீண்டகால பென்ஷன் மறுபரிசீலனை திட்டத்தை செம்மைப்படுத்தி சரியான நபர்களை கண்டறிந்து அவர்களை சென்றடையும் வண்ணம் செயல்பட்டு வரும் ABM-ன் தலைமையகத்திற்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இந்த பரிசீலினையை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆறு மாதமும் ஆய்வு செய்து திறம்பட செயல்படுத்திடுமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
5) ரியாத் கிளை சார்பாக நமதூர் ஏழைகளின் குடும்பத்திலுள்ள 3 ஆண் பிள்ளைகளுக்கு இலவசமாக ஹத்தனா கடமையை நிறைவேற்றப்பட்டது. இதற்காக ரியாத் கிளை சார்பாக ABM தலைமையகத்திற்கு நன்றியினை இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
6) ஏழைகளின் சேவை மைய்யமான ABM-ன் மூலம் நமதூரிலுள்ள விடுபட்ட ஏழைகள் மற்றும் மாடி வீட்டு ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கான நிதி உதவி செய்யும் வண்ணம் நமதூரில் அறிந்த ஏழைகளின் விபரங்களை ரியாத் கிளை பொறுப்புதாரிகளிடம் விபரங்களை ஒப்படைக்குமாறும் அதற்கான ஏற்பாடுகளை தலைமையகத்தின் மூலம் கலந்து ஆலோசித்து நிறைவேற்ற முயற்சி செய்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த 91-வது அமர்வு SEPTEMBER மாதம் 10-தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்


