அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பேருந்து நிலையத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
அதிராம்பட்டினம் To பட்டுக்கோட்டை சாலையில் குறிப்பிட்ட தார்சாலைகளை சில மாதங்களுக்கு முன் உயர்த்தினார்கள்.இதன் காரணமாக சேர்மன்வாடி பேருந்து நிலைய நிழற்குடை பள்ளத்தாக்கு போல் ஆகியது.மேலும் அந்த நிழற்குடை ஏற்கனவே கவனிப்பாரின்றி இருந்தது.அந்த கட்டிடம் சிதலமடைந்தும் காணப்படுகிறது.
இதனால் யாரும் அந்த நிழற்குடையை பயன்படுத்துவதில்லை.கடந்த காலங்களில் பெய்த மழைநீர் சேர்மன்வாடி நிழற்குடையில் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் பண்ணையாக மாறிவருகிறது.நிழற்குடைக்கு அருகில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.இதனால் பொதுமக்களுக்கும்,பயணிகளுக்கும் எளிதில் நோய் பரவும் அபாயம் உள்ளது.
எந்தவொரு அரசு அதிகாரிகளும் இதுவரை பேரூராட்சி சார்பாக பார்வையிடவில்லை.மேலும் அரசின் வருமுன் காப்போம் என்ற முழக்கம் வெறும் வெற்று முழக்கமாக இருப்பதாகவும்,நோய் வந்த பின் தான் வருவோம் என்பதே புதிய முழக்கமாக்கி வருகிறது அதிரை பேரூராட்சி என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.