டெல்லி காவலர் சஃபியாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடியவர்களை கைது செய்ய நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது.
தமிழகத்தில் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி அதிரை நகர தமுமுகவின் சார்பில் சஃபியாவுக்கு நீதி வழங்க கோரி கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா திருச்சி அய்யூப், சகோதரி செளதா தாங்கழ் அப்துல் காதர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்.
சமூகத்திற்கு எதிரான அநீதியை ஜனநாயக வழியில் தட்டி கேட்க அனைவரும் வருக என தமுமுகவின் நகர தலைவர் அலீம் அழைக்கிறார்.