Home » அதிரை முஸ்லீம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக அஸ்பாஃக் நியமனம் !

அதிரை முஸ்லீம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக அஸ்பாஃக் நியமனம் !

0 comment

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் இன்று அதிராம்பட்டினம் வருகை தந்தார்.

மாவட்ட ஊடக அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது இல்லத்திற்கு சென்று அவரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு,, மறைந்த முன்னாள் மாநில துணைத் தலைவர் மறைந்த SSB அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனிடையே அதிரை நகர IUML அலுவலகம் சென்ற அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பான MSFன் அதிரை நகர அமைப்பாளராக அஸ்ஃபாக் அகமதுவை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இவருக்கு நகர பொறுப்பில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பதோடு, இயக்க வளர்ச்சிக்கும் பாடுபட கேட்டு கொண்டார்.

இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர்,மாவட்ட செயலாளர், நகர பொருளாளர், நகர ஊடக அணி அமைப்பாளர்,மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர் அமைப்பாளராக பொறுப்பு ஏற்று கொண்ட அஸ்பாஃக் கூறுகையில், போதை பழக்க வழக்கத்தால் மாணவர்களின் எதிர்காலம் சீர்கெட்டு கொண்டுள்ளது என்றும், இதனை சட்டரீதியாக தடுக்க MSF இயக்கம் களம் அமைக்கும் என தெரிவித்தார்.

மேலும் இயக்கங்களாய் பிரிந்து கிடக்கும் இளைஞர் சமூகத்தை வலிமைப்படுத்த தாய்ச்சபையாம் முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு சமூதாய பணி செய்திட வேண்டும் எனவும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter