Home » சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வருது? உடனே செக் பண்ணுங்க!

சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வருது? உடனே செக் பண்ணுங்க!

0 comment

சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசிடமிருந்து நமக்கு எவ்வளவு மானியம் வருகிறது என்று இப்படி செக் பண்ணலாம்…

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த மானியம் என்பது, முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும்.

முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், மானியம் பெற முடியாது.)

ஒவ்வொரு முறையும் சிலிண்டர் நிரப்பும்போது அதற்கான மானியத் தொகை வருகிறதா இல்லையா என்று நம்மில் பலருக்கு சந்தேகம் இருக்கும். அதைக் கண்டுபிடிக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலமாகவே அதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மானியத் தொகை எந்தக் கணக்கிலிருந்து மாற்றப்படுகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.

Mylpg.in என்ற வெப்சைட்டில் சென்று மெயின் பேஜில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படத்தில் உங்களுடைய சிலிண்டர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதிலுள்ள பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், ஏஜென்சி போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்க வேண்டும்.

இப்போது புதிய பக்கம் ஒன்று ஓப்பம் ஆகும். அதில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா, இல்லையா என்பதை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை மானியம் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் 18002333555 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கும் அழைத்து புகாரளிக்கலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter