அதிரை எக்ஸ்பிரஸ்:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் வருகின்ற 05.12.17 அன்று வருவதால் அதை அனுசரிக்கும் விதமாக அ .இ.அதிமுக (அம்மா)அணி சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகரம் சார்பாக நேற்று 03.12.17 ஞாயிறு கிழமை மாலை 05.00 மணியளவில் அக்கட்சி அலுவலகத்தில் அதிரை நகரத் தலைவர் l.ஹபீப் முகமது தலைமையில் ஆலோசனை நடைபெற்று.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலபிரிவு துணை தலைவர் M.P அபுபக்கர், கழக செயலாளர் A.ஜமால் முகமது.அம்மா பேரவை செயலாளர் S.முகம்மது கழக துணை செயலாளர் அய்யவு ஆகியோர் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
05.12.17 அன்று காலை 9.00 அன்று நடைபெறும் நினைவுநாளில் அனைத்து கழக தொண்டர்கள் பங்கெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.