70
இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எச் ராஜா விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.