அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக சென்னை,கோவை,திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடத்துகிறது.
பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை திரும்ப தரக்கோரியும்,பள்ளியை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களான சென்னை,திருச்சி,மதுரை,கோவை ஆகிய விமான நிலையங்கள் முற்றுகையை டிசம்பர் 6 அன்று நடத்தப்படும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.