Home » இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரகால பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரகால பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

0 comment

அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் – நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு;

தேனி மாவட்டம் – கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் இ.பெரியசாமி;

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் – பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு;

தருமபுரி மாவட்டம் – வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்;

தென்காசி மாவட்டம் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்;

இராமநாதபுரம் மாவட்டம் – தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு;

காஞ்சிபுரம் மாவட்டம் – ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்;

திருநெல்வேலி மாவட்டம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்;

திருவாரூர் மாவட்டம் – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி;

கோயம்புத்தூர் மாவட்டம் – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி;

கிருஷ்ணகிரி மாவட்டம் – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி;

பெரம்பலூர் மாவட்டம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்;

தஞ்சாவூர் மாவட்டம் – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோரை நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter