அதிரை எக்ஸ்பிரஸ்:- நாம் மனிதர் கட்சி சார்பில் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் தேர்தலுக்கு வேட்புமனுதாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி காலி என்று அறிவிப்பாணை வெளியிட்டது.இதற்கு பிறகு பல மாதங்கள் கழித்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் மனிதர் கட்சியும் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அக்கட்சியின் நிறுவனர் தௌபிக் அறிவித்திருந்தார்.இந்நிலையில் நாம் மனிதர் கட்சியின் வேட்பாளரான ரெ.ஜோதிகுமார்,தௌபிக் தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பாளர் ரெ.ஜோதிகுமார் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறுகையில் குடிநீர்,குப்பைகளை அகற்றுதல்,கழிவுநீர் வடிகால் அமைத்தல்,கொசுத்தொல்லைகளை அகற்றுதல் உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.