அதிரையின் மருத்துவ துறையை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என இருவகைப்படுத்தலாம். கொரோனாவுக்கு முன்புவரை அதிரை மக்களை வருக வருக என வரவழைத்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைகள், கொரோனா சமயத்தில் நில், கவனி, திரும்பி செல் என அனைவரையும் ஊருக்கே திருப்பி அனுப்பிவிட்டதை யாரும் மறுக்க முடியாது. அந்த சூழலில் அதிரை மக்களின் தேவை அறிந்து சேவையாற்றியதில் ஷிஃபா மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் வெளியூர் மருத்துவர்கள் பார்க்க மறுத்த பிரசவங்களை துணிவுடன் பார்த்து தாயையும் சேயையும் பாதுகாத்த ஷிஃபா மருத்துவர்களின் சேவை நன்றியுடன் நினைவில் கொள்ளத்தக்கது. அப்போது நிர்வாகத்திற்கு அதிகார மட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், அவற்றை அவர்கள் கையாண்ட விதம் என நொடிக்குநொடி பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில், கொரோனா சமயத்தில் யார்யாரெல்லாம் நம்மோடு இருந்தார்கள் என்பதை அறிந்த அதிரை மக்கள், கொரோனாவுக்கு பின்பும் உள்ளூர் மருத்துவமனையான ஷிஃபாவுக்கு நேசகரம் நீட்டியுள்ளனர். இதனால் பிரசவம், டயாலிசிஸ் உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியூர் செல்லாமல் அதிரை ஷிஃபா மருத்துவமனையிலேயே அதிரையர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிரை சுற்றுவட்டாரத்திலேயே 24 மணிநேரமும் சுழற்சிமுறையில் மருத்துவர்கள் இருப்பது ஷிஃபா மருத்துவமனையில் மட்டுமே. இதனால் அதிரை மட்டுமின்றி முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களை சார்ந்த பொதுமக்களும் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறான முக்கியத்துவம்வாய்ந்த ஷிஃபா மருத்துவமனையின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? தன்னிறைவு மருத்துவத்திற்காக பொதுமக்கள் எத்தகைய ஒத்துழைப்பை வழங்க போகின்றனர்? காலமே பதில் சொல்லும்…
மெல்லமெல்ல மெருகேறும் அதிரை ஷிஃபா! பேராதரவால் திணறடிக்கும் மக்கள்!!
46
previous post