அதிராம்படினம் சேது சாலையில் இயங்கி வருகிறது அங்கீகாரமற்ற மதுபான கடை.
இந்த கடையில் சட்டத்திற்கு விரோதாமாக 24 மணி நேரமும் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
இதில் மதுகுடித்த இருவர் எதிர் சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த உ.பி வியாபாரிகள் மீது கண்மூடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ரத்த காயங்களுடன் கிடந்த நபரை அங்கிருந்த சக வியாபாரிகள் மீட்டுள்ளனர்.
ரத்த காயங்களுடன் காவல் நிலையம் சென்ற இருவரையும் சட்டை செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் காவல்த்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும், சட்டத்திற்கு விரோதமாக மது கூடம் நடத்தும் நபர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.