கட்டுமான பொருட்களின் முறையற்ற விலை உயர்வால் அதிரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அதிரை ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் “சமீபகாலமாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.100/-க்கு மேலும், கம்பி டன்னுக்கு ரூ.20,000/-யை தாண்டியும் கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேபோல் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் முடங்கிப்போய் உள்ளன. இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சொந்த வீடு கனவில் இருக்கும் சாமானிய மக்களின் கனவு நிறைவேறாமல் போகும் சூழல் உருவாகும். எனவே கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் விலை நிர்ணயம் செய்ய ஏதுவாக கட்டுமான பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழக அரசு அமைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துக! முதலமைச்சர் தனிப்பிரிவில் அதிரை ஆமினா’ஸ் மனு!!
195