அதிரை பகுதியில் தொடர் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்.
அப்பாவி மக்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றி பரிதவிப்பு.நேற்று இரவிலிருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அதிரையின் பல பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கடுத்து ஓடுகிறது.
பல தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொருள்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து பொதுமக்களை மிகபெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக முத்தம்மாள் தெரு, பிலால் நகர், புதுத்தெரு தென்புறம் போன்ற பகுதி விளிம்புநிலை மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் என்னசெய்வதென்றே தெரியாமல் மக்கள் கைகுழந்தைகளை, வயதானவர்களை வைத்துகொண்டு கண்ணீரோடு தண்ணீரில் தத்தளிக்கின்றனர்.
அரசு வெள்ள மீட்பு குழுவினர், தன்னார்வ அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் வெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளுக்கு விரைந்து சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளவும்.
உயிர் இழப்புகள், மிகபெரிய பொருளாதார இழப்புகள் ஏற்படுவதற்கு முன் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் தற்போது அவசியமாகிறது.
Source
அதிரை_உபயா