புகையிலை உபயோகிப்பவர்கள் அதிலிருந்து மீள உதவும் வகையில், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களுடன் டோல்ப்ரீ நம்பரை அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை புகையிலை பொருட்களில் எச்சரிக்கை வாசகம் மற்றும் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும், இந்நிலையில் தற்போது அதனுடன் புகையிலைக்கு அடிமையானவர்களை மீட்கபதற்கான டோல்ப்ரீ நம்பர் ஒன்றையும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1800 227787 என்ற டோல் பிரீ நம்பர் தேசிய புகையிலை தடுப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புகைக்கு அடிமையானவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும். மேலும் புகையிலையால் ஏற்படும் நோய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் புகையிலை பொருட்களின் பாக்கெட்கள் மீது அச்சிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பித்தக்கதது.
சிகரெட்டை விட ‘ டோல்ப்ரீ நம்பர்’: மத்திய அரசு திட்டம்
208