இன்று (14-11-2021) தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த உத்தம திருநபியின் சீறத் விழாவிற்கு வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் உயர் திரு. எம்.எம். அப்துல்லாஹ் அவர்களிடம், தமிழ் கணிமைக் கொடையாளி அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் தமிழ்க் கணிமையில் பங்காற்றியோருக்கு அல்லது அறிவியல் பங்களிப்பில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணமுடிச்சுடன் கூடிய விருதை தமிழக அரசு வழங்க வேண்டி சமூக ஆர்வலரும் தமிழ் விக்கிபிடியா நிர்வாகியுமான மாகிர் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2010 சூன் 23ஆம் தேதி கோவை கொடிசியா அரங்கில் நடந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை டாக்டர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடத்தியது. அதில் யுனிகோட் தமிழ்கணிமைக்கு பெரும் பங்காற்றிய தமிழ்க் கணிமைக் கொடையாளி மறைந்த அதிரை உமர் தம்பி அவர்களின் பெயரில் அரங்கு ஒன்றிற்கு ‘உமர்தம்பி’ என பெயரிட்டு உத்தமமும், தமிழக அரசும் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

