Home » இனி டெபிட் கார்டு அவசியமில்லை.. டெபிட் கார்டு இல்லாமலேயே ATMல் பணம் எடுக்கலாம்..!

இனி டெபிட் கார்டு அவசியமில்லை.. டெபிட் கார்டு இல்லாமலேயே ATMல் பணம் எடுக்கலாம்..!

0 comment

பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்வோம். ஆனால் டெபிட் கார்டை வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருப்போம். இதற்காக மீண்டும் ஒரு அலைச்சல், அதன் பின்னர் இரண்டு வேலையாக செய்திருக்கலாம்.

ஆனால் இனி அப்படி அலைய வேண்டிய அவசியமில்லை. இனி டெபிட் கார்டு இல்லாமலேயே எடுத்துக் கொள்ளலாம்.
தொழில்நுட்பம் வளர வளர வங்கித் துறையில் பல மாற்றங்கள் இருந்து வருகின்றன. ஒரு காலகட்டத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க நின்ற காலம் போய், இன்று இருந்த இடத்தில் இருந்தே யுபிஐ பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது.டெபிட் கார்டு அவசியமில்லை
இந்த நிலையில் டெபிட் கார்டு இல்லாமல், ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் வசதிகள் பல வங்கிகளிலும் உள்ளன. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ ஏடிஎம்-களில் டெபிட் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம் என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். ஆக இனி நீங்கள் ஏடிஎம் செல்லும் முன் டெபிட் கார்டினை எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை.
எங்கு எவ்வளவு எடுக்கலாம்?
இதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இது எஸ்பிஐ ஏடிஎம்-கள், பிஓஎஸ் டெர்மினல்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்காள் ஆகியவற்றிலும் இந்த ஆப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்பின் மூலம் 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் அதிகபட்சம் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி எடுப்பது?
உங்களது ஸ்மார்போனில் எஸ்பிஐ-யின் யோனோ ஆப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அதிலும் உங்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

அதில் யோனோ கேஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். யோனோ கேஸ் ஆப்சனின் கீழ் உள்ள ATM ஆப்சனை கிளிக் செய்யவும்.

அடுத்ததாக எவ்வளவு தொகை என்பதையும் பதிவு செய்யவும்.

அதன் பின்னர் 6 இலக்க பின் நம்பரை உருவாக்கவும். இந்த 6 இலக்க பின் நம்பரை உருவாக்கிய பின்னர், அதனை 6 மணி நேரம் தான் பயன்படுத்த முடியும்.

இந்த செயல்பாட்டினை முடித்த பின்னர் ஏடிஎம்மில் சென்று, யோனோ கேஸ் விருப்பத்தினை தெரிவிக்கலாம்.

அதனை கிளிக் செய்யும்போது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்த 6 இலக்க நம்பரை பதிவு செய்ய வேண்டும். இதனை கொடுத்த பின்னர், நீங்கள் பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்
மொபைல் நம்பர் அவசியம்
எனினும் இந்த செயல்முறைக்கு உங்களது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். இதனை வைத்திருந்தால் மட்டுமே உங்களால் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும்.

ஏடிஎம் இல்லாமலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், இதனை முன்னதாக நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter