Home » அதிரை : வழுவிழந்த கட்டிடம் !சமூக ஆர்வலரின் தொடர் முயற்சியால் முடிவுக்கு வந்தன!

அதிரை : வழுவிழந்த கட்டிடம் !சமூக ஆர்வலரின் தொடர் முயற்சியால் முடிவுக்கு வந்தன!

0 comment

அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் முன்பொரு காலத்தில் இயங்கி வந்த நூல் நுகர்வோர் கட்டிடம் நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டிடமாக கட்டப்பட்டு இயங்கி வந்தன.

காலப்போக்கில் பயனற்று போன இக்கட்டிடத்தில் சத்துணவு கூடம்,அங்கன் வாடி இயங்கின இந்த நிலையில் மிகவும் பலவீனம் அடைந்து சிதிலமடைந்த இக்கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் தொடர் முயற்சி மேற் கொண்டனர்.

நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை அகற்ற பல்வேறு சட்ட முன்னெடுப்பு காரணங்களால் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வந்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலரான மு.க.சரவணன் மு.சரண்ராஜ் முதல்வரின் தனிபிரிவுக்கு உரிய ஆவணங்களுடன் தகவல் தெரிவித்திருந்தார்.

இதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் இன்றுகாலை முத்தம்மாள் தெரு நூல் நுகர்வோர் கட்டிடத்தை இடித்தனர்.

மாவட்ட ஆட்சியர் வருகையின் போது அந்த தெருவைச்சேர்ந்த தி.சா.சுசேந்திரன் மற்றும் தெரு மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை கருத்தில் கொண்ட ஆட்சியர் உடனடியாக இக்கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டார் இதன் பேரில் இடிக்கப்பட்ட இக்கட்டிடத்தால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter