Home » அதிரை மக்களை தேடி முதல்வர் ! குறைதீர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார் !!

அதிரை மக்களை தேடி முதல்வர் ! குறைதீர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார் !!

0 comment

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில் ஒரு பகுதியாக மக்களை தேடி முதல்வர் என்ற குறைதீர் சிறப்பு முகாமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பகுதி வாரியாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு கல்வி துறையமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நியமித்து உத்தரவிட்டார்.

அதன்படி வருகின்ற 13-12-2021 அன்று நண்பகல் 12 மணிக்கு லாவண்யா திருமண மகாலில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை பெறுகிறார்.

பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கையை துறை சார்ந்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக முதல்வரின் தனிப் பிரிவு தெரிவித்து இருக்கிறது.

தங்கள் பகுதியின் கோரிக்கை எதுவாயினும் சுய விபர குறிப்போடு மனு அளித்து தீர்வு காண நல்ல வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter